அரசு பள்ளிக்கு ஆர்ஓ இயந்திரம் சொலியூசன்ஸ் நிறுவனம் வழங்கியது
திருவள்ளூர், செப்.3- புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பிசினஸ் கோர் சொலியூஷன்ஸ் (பிசிஎஸ்), நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம், புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபட்டு வரும் நிலையில், இந்த பள்ளிக்கு சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தியிருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சென்னையைச் சேர்ந்த பிசினஸ் கோர் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் உரிமை யாளர் பிரகாஷ் பள்ளியில் குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரத்தை புதனன்று (செப்.3) வழங்கினார். இந்நிகழ்வில் நிறுவன உரிமையாளரின் பெற்றோர் பழனி மற்றும் விஜியா, பி.சி.எஸ் ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரகாஷ் கூறியதாவது, மென்பொருள் தொழில்நுட்ப துறையில் எஸ்ஏபி சாப்ட்வேருக்கென சிம்போனி என்ற ஆட்டோமேட்டட் தளத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்த இந்நிறுவனம் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. இதுவரை 12 கிராமப்புற அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளது என்றார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேலன், பட்டதாரி ஆசிரியர் திருமுகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மன்மோகன், எஸ்எம்சி தலைவர் நதியா, எஸ்எம்சி நிர்வாகி டி.கோபால கிருஷ்ணன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மா.செல்வராஜ், டிஜெஎஸ் கலவி குழும ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். ஆசிரியர் லோகநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தார்.