ஸ்மார்ட் மீட்டர் எதிர்ப்பு: காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, காஞ்சிபுரம் மின் திட்ட கிளை சார்பாக காஞ்சிபுரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். காஞ்சி மின் திட்டக் கிளை செயலாளர் ஜி.படவேட்டான், பொருளாளர் பி.கேசவன், துணைத் தலைவர் ஆர்.பாபு, முன்னாள் வடக்கு கோட்ட செயலாளர் கே.சங்கர், வடக்கு கோட்ட செயலாளர் சி.பூபாலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்க நிர்வாகிகள் ஜி.உமாபதி, சி.செல்வராஜ், இ.பார்த்திபன், வி.பஞ்சாட்சரம், கே.லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.