மதுரை, ஜன.1- காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீத மாக உயர்த்திய ஒன்றிய அர சைக் கண்டித்தும் வரி உயர்வை திரும்பப்பெறக் கோரியும் காலணிகள் விற்ப னைக் கடைகளில் கருப்புக் கொடி கட்டி, விற்பனையா ளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சிறுதொழில்களை அழித்து, பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களை வளர் த்்துவிடுவதில் தீவிரமாக ஈடு பட்டுள்ள மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலணிகள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீத மாக உயர்த்தி, அத்தொழி லையும் நசுக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இச்செயலு க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெறக் கோரியும் ஜனவரி 1 அன்று மதுரை கட்ராபாளையம் பகு தியில் செப்பல் பஜாரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளில் கருப்புக்கொடி கட்டியும், விற்பனையா ளர்கள் கருப்புச் சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செப்பல் பஜார் அசோசியேசன் செய லாளர் லியாகத் அலி செய்தி யாளர்களிடம் கூறுகையில், “அனைத்துத்தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய கால ணிக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீத மாக உயர்த்தியுள்ளது.இத னால் லட்சக்கணக்கான வியா பாரிகள் பாதிக்கப்படுவர். ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி நிலுவைத்தொகையை மாநில அரசுக்கு வழங்காத நிலை யில் தொடர்ந்து வரியை உயர்த்துகிறது. காலணிகள் மீதான வரி உயர்வை திரும் பப்பெற வேண்டும். இது குறித்து மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தெரி வித்தார்.