tamilnadu

img

தையல் தொழிலாளர் சங்க மகாசபை

தையல் தொழிலாளர் சங்க மகாசபை

நாமக்கல், ஆக.4  சீருடை தாயரிக்கும் பணிகளை நாமக்கல் மாவட்ட தையல் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டும் நாமக் கல் மாவட்ட தையல் தொழிலாளர் சங்க  மகாசபை வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்ட தையல் கலை ஞர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் 7  ஆவது மாவட்ட மகாசபை திங்களன்று  வெப்படையில் சங்க தலைவர் எஸ்பி. அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. இதனை, சிஐடியு மாவட்டச் தலைவர் எம்.அசோகன் துவக்கி வைத் தார். வேலையறிக்கையை சங்க செய லாளர் ஐ.ராயப்பன், வரவு செலவு அறிக்கையை, பொருளாளர் ஏ. மாதேஸ்வரி  சமர்ப்பித்தனர். மகாச பையை வாழ்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமி, பஞ் சாலை சங்க மாவட்டச் செயலாளர் எஸ். தனபால், விதொச ஒன்றிய நிர்வாகி வி. சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். இதில் தமிழக அரசின் சார்பில்  வருடம் தோறும் அரசு பள்ளி மாண வர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சீருடை  தைப்பதற்கான பணிகளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தையல் தொழி லாளர்களுக்கும் வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.  இம்மகாசபையில், தலைவராக  அண்ணாதுரை, செயலாளராக மாதேஸ்வரி, பொருளாளராக ஐ.ராயப் பன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் டி.மூர்த்தி உரை யாற்றினார். முடிவில், கே.தெய்வ ராஜ்  நன்றி கூறினார். தையல் தொழிலாளர்  சங்க மகாசாபையில் ஏராளமான தையல் தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.