tamilnadu

img

பிஎஸ்என்எல் சேவையில் கடுமையான அலட்சியம்

பிஎஸ்என்எல் சேவையில் கடுமையான அலட்சியம்

மத்திய அரசுக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்

திண்டுக்கல், அக்.3- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்  டத்தில் நிலவும் கடுமையான டவர் பிரச்சனை கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கடுமை யான கண்டனத்தை தெரிவித்துள்ளார். வியாழனன்று திண்டுக்கல்லில் செய்தி யாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாடு  முழுவதும் 92 ஆயிரம் புதிய டவர்கள் அமைக் கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு டவர்கள் என்ற விவரமே இல்லை. இது தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணிப்பதாகும்” என்று குற்றம்சாட்டினார். ஆறு மாத காலதாமதம் கடந்த ஏப்ரல் மாதம் பிஎஸ்என்எல் பொது  மேலாளருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியதாக வும், ஆனால் ஆறு மாதங்கள் கழித்தும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். “டவர் பிரச்சனை கள் குறித்து மூன்று மாவட்ட நிர்வாக குழு கூட்டங்களிலும் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார். தொழில்நுட்பத்தில்  ஏழு ஆண்டு பின்தங்கல் “2012-ல் ஏர்டெல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை  வழங்கப்பட்டது. ஆனால் பிஎஸ்என்எல்லுக்கு 2019-ல்தான் கிடைத்தது. இந்த ஏழு ஆண்டு  காலதாமதம் நிறுவனத்தை பெரும் பின்னடை வுக்கு உள்ளாக்கியது. 4ஜி விரும்பிய மக்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறினர். இன்று 5ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பிஎஸ்என்எல்லுக்கு 5ஜி கிடைக்க வில்லை. இப்படியான தாமதங்கள் பொதுத் துறை நிறுவனத்தை திட்டமிட்டு நலிவடையச் செய்கின்றன” என்று கடுமையாக விமர் சித்தார். டவர்களின் மோசமான நிலை திண்டுக்கல் மாவட்டத்தில் 424 டவர்கள் இருந்தாலும், பல பகுதிகளில் சேவை கிடைப்ப தில்லை என்று குறிப்பிட்டார். “212 நகர்ப்புற 4ஜி டவர்கள் உள்ளன. ஆனால் சிறுமலை, பிள்ளை யார்நத்தம், சிரங்காட்டுப்பட்டி, ஊராளிபட்டி, மலையூர், கணவாய்பட்டி, குஜிலியம்பாறை, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகள், பழனி பொந்துப்புளி போன்ற பல பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவையே இல்லை” என்று பட்டி யலிட்டார். மலைப்பகுதிகளில் 4ஜி டவர்கள் இருந்தா லும் 2ஜி சேவை கிடைக்காததால், சாதாரண பட்டன் செல்போன் பயன்படுத்தும் ஏழை மக்கள்  பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றும்  தெரிவித்தார். மின்துண்டிப்பு ஏற்படும்போது டவர்கள் செயலிழந்து விடுவதையும், பேட்டரி அல்லது  ஜெனரேட்டர் காப்பு வசதிகள் இல்லாததையும் சுட்டிக்காட்டினார். அரசுத் திட்டங்களுக்கு இடையூறு “நெட்வொர்க் கிடைக்காததால் அர சாங்கத்தின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்த முடியவில்லை. ரேசன் கடைகளில் உணவுப் பொருள் வழங்க முடியவில்லை. விற்பனையாளர்கள் மக்களை சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு வரச்சொல்லி அங்கு கைரேகை பதிவு செய்ய சொல்கின்றனர். இது  எவ்வளவு அவமானகரமான நிலை. ஆசிரி யர்கள் வருகை பதிவு செய்ய முடியவில்லை. மாணவர்களின் ஆன்லைன் கல்விக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது” என்று விவரித்தார். மத்திய அமைச்சரின்  வாக்குறுதி காற்றில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தி யாவை நேரில் சந்தித்ததாகவும், திண்டுக்கல்  மாவட்டத்தின் பிரச்சனைகளை எழுத்துப்பூர்வ மாக விளக்கியதாகவும் தெரிவித்தார். “அமைச்சர் பிரச்சனையை அப்கிரேடு செய்வ தாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எம்.பி.  என்ற முறையில் நான் முயற்சி செய்யவில்லை என்று மக்கள் என் மீது குறைபட்டுக் கொள் கின்றனர்” என்று வேதனை தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனங்களின் ஆதிக்கம் விருப்ப ஓய்வுத் திட்டத்தால் லட்சக்க ணக்கான ஊழியர்கள் வெளியேறியதால், பிஎஸ்என்எல் தனியார் ஒப்பந்த நிறுவனங்களை நம்பியுள்ளது என்றார். “பிஎஸ்என்எல்லுக்கு எதி ராக உள்ள டாடா நிறுவனம் டவர் நிறுவும் டெண்டரை எடுத்துள்ளது. அவர்கள் சீனா விடம் இருந்து டவர்கள் வாங்கி நிறுவுகிறார்கள்.  இது பிரதமரின் ‘சுதேசி சேவை’ அறி விப்புக்கு முரணானது. பிஎஸ்என்எல் பொறியா ளர்களுக்கு போதிய பயிற்சியும் அளிக்கப்படு வதில்லை” என்று குற்றம்சாட்டினார். அரசு சொத்துக்கள் விற்பனை “ஒன்றிய அரசு பொதுத்துறை நிறு வனங்களின் சொத்துக்களை விற்பனை செய்கி றது. செயல்படாத எக்ஸ்சேஞ்ச் கட்டடங்கள் விற்கப்படுகின்றன. திண்டுக்கல் எக்ஸ்சேஞ்சில் கூட பிரியாணி கடை வந்துவிட்டது. பொது மக்களின் சொத்துக்களை இப்படி விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டித்தார். போராட்ட எச்சரிக்கை அரசு அமைந்த காலம் முதல் டெலிபோன் ஆலோசனைக் குழு கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரியும் இதுவரை கூட்டப்படவில்லை என்றார். “பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என்றால், பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப் பந்தம் உள்ளது” என்று எச்சரித்தார். ஆர்எஸ்எஸ் நாணயத்திற்கு கண்டனம் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நாணயத்தை பிரதமர் வெளியிட்டது குறித்தும் கருத்து தெரி வித்தார். “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத, மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸிற்கு நாண யம் வெளியிடுவது மதச்சார்பற்ற நாட்டின் அரசி யலமைப்பு கொள்கைக்கு எதிரானது. வர லாற்றைத் திரித்தெழுதும் இச்செயலை சிபிஎம்  சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்” என் றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி ஆகி யோர் உடனிருந்தனர்.