மேற்கு ஆசியா, வடக்கு, மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பின்வரும் 22 நாடுகள் அரபு உல கம் என அறியப்படுகிறது. அல்ஜீரியா, பஹ்ரைன், கோமோராஸ், ஜிபுட்டி, எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, சிரியா, மொராக்கோ, ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவூதி அரே பியா, சோமாலியா, சூடான், சிரியா, துனி சியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், அரபு உலகத்தின் மொத்த ஜனத்தொகை 42 கோடி. ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)டிசம்பர் 17 இல் வெளியிட்ட அறிக்கைப் படி அரபு உலகில் மூன்றில் ஒருவர் பட்டினி, பஞ்சம், போஷாக்கின்மையால் அவதிப்படுகின்ற னர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் சோமாலியா மற்றும் ஏமன். இங்கு முறையே 60 சதவீதம், 45 சதவீதம் மக்கள் பசியினாலும், மோசமான போஷாக்கின் மையாலும் வாடுகின்றனர். பணக்கார அரபு நாடுகளில் 29 சதவிகித மக்கள் மிக வும் குண்டாக இருப்பதால் அவதிப்படு கின்றனர்.