tamilnadu

காசாவில் தீவிர பஞ்சம்: ஐ.நா. அறிவித்தது!

காசாவில் தீவிர பஞ்சம்: ஐ.நா. அறிவித்தது!

காசா, ஆக. 23- காசாவில் தீவிர பஞ்சம் ஏற்பட்  டுள்ளதாக ஐ.நா. அவை அதிகா ரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காசாவில் விவசாய நிலப்பரப்பை குண்டுகளை வீசி முற்றிலுமாக அழித்து விட்ட இஸ்ரேல், பாலஸ்தீன  மக்களுக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கள் மூலம் உணவு, மருந்து  வழங்கப்படுவதையும் தொடர்ந்து  தடுத்து வருகிறது. கொத்துக் கொத்தாக  மடியும் பாலஸ்தீனர்கள் இதனால், பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமடைந்து குழந்தை கள், பெண்கள் என பலரும் கொத்துக்  கொத்தாக மடிந்து வருகின்றனர். பலி  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையிலேயே, காசாவில் தீவிர பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா.  அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளி யிட்டுள்ளது. 5 லட்சம் பேர் பாதிப்பு பஞ்சத்தை உறுதிசெய்யும் ஆய்வு முறைகளின் படி ஒரு பகுதியில் உள்ள 20 சதவிகிதம் அல்லது அதற்கு  மேற்பட்ட குடும்பத்தினர் முழுமை யான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டாலோ 30 சதவிகி தம் அல்லது அதற்கு குழந்தைகள்  கடுமையான ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒவ்வொரு நாளும் 10,000  பேரில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட  நபர்கள் பட்டினியின் காரணமாக பலி யாகி வந்தாலோ அது பஞ்சம் பாதித்த பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படும். அந்த வகையில், ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைப் பகுப் பாய்வு (IPC) என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் படி காசாவில் உள்ள 5,00,000 பாலஸ்தீனர்கள் பஞ்சத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  காசா முழுவதும்  பரவும் அபாயம் தற்போது காசா நகரில் பரவி யுள்ள இந்த பஞ்சம் செப்டம்பர் மாத  இறுதியில் டேர் அல்-பாலா, கான்  யூனிஸ் என காசா முழுவதும் தீவிரமா கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.