tamilnadu

ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் பள்ளியில் பெண் காவலர்களை அமர்த்த வலியுறுத்தல்

ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் பள்ளியில் பெண் காவலர்களை அமர்த்த வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக. 6 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு 17 ஆவது மாநாடு செவ்வாயன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது.  மாநாட்டிற்கு பகுதி தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சங்க கொடியை முன்னாள் பகுதி தலைவர் பச்சையம்மாள் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் ஹேமா வாசித்தார். பகுதிக்குழு உறுப்பினர் ராணி வரவேற்றார். வேலை அறிக்கையை பகுதி செயலாளர் கீதா வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ராஹீலா துவக்க உரையாற்றினார். குடும்ப நல பாதுகாப்பு ஆலோசகர் ரோஸி, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா, பகுதி பொறுப்பாளர் கோவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில், மருத்துவரை நியமிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் படுக்கை வசதி எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பெண் காவலர்களை உடனடியாக அமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், பகுதி தலைவராக கே.கீதா, பகுதி செயலாளராக எஸ். ராணி, பொருளாளராக எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி நிறைவுரையாற்றினார். பகுதி பொருளாளர் காயத்ரி நன்றி கூறினார்.