விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்திடுக
நாகப்பட்டினம், ஜூலை 20 - இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு ஞாயிறன்று நாகப்பட்டினம் பாப்பாக்கோவிலில் மாவட்டத் தலை வர் ஏ.சிவனருட்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சு.சிவ குமார் வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். வேலை மற்றும் வரவு-செலவு அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவராக ஏ.சிவன ருட்செல்வன், செயலாளராக எஸ்.ஆர்.இராஜேந்திரன், பொருளாளராக என்.வெற்றிவேல், துணைத் தலை வர்களாக கே.தங்கமணி, பி.ஜீவா, சு. சிவகுமார், எஸ்.வி.செல்வகுமார், ஏ.எஸ்.பழனியம்மாள், மணிமேகலை, துணைச் செயலாளர்களாக கே.அன்ப ழகன், பி.தமிழரசன், டி.அருண்ராஜ், பி. ஜெயராமன், ஆர்.ரவி, கே.விஜய லெட்சுமி, ஆகியோர் தேர்தெடுக்கப்பட்ட னர். ஊட்டச்சத்து திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழி யர்களாக அறிவித்து, பணியா ளர்களுக்கு ரூ.26 ஆயிரமும், உதவியா ளர்களுக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற் சாலைகளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் வைக்கோலைக் கொண்டு பேப்பர் தயாரிப்பு தொழிற் சாலை அமைக்க வேண்டும். நாகப் பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப் பட்டுள்ள தினக்கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர் கே. விஜயன் நிறைவுரையாற்றினார். புதிய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இரா ஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.