tamilnadu

img

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில்பாலாஜி அமைச்சராகலாம்

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில்பாலாஜி அமைச்சராகலாம்

உச்ச நீதிமன்றம் தகவல் சென்னை: நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்து, அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலை  வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில  கருத்துகளை நீக்கி  உத்தரவிடக் கோரி  செந்தில் பாலாஜி முறை யீடு செய்திருந்தார். நீதி பதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலா ஜிக்கு எதிராக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளதால் அவர்  அமைச்சராக இருந் தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்று நீதிபதிகள் கூறினர். அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.