tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் பி. ராமு காலமானார்

சிபிஎம் மூத்த தோழர் பி. ராமு காலமானார்

மன்னார்குடி, ஆக. 29-  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தின் மூத்த தோழர் பி. ராமு காலமானார். அவருக்கு வயது 85.  உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி வியாழன் அன்று மாலை காலமானார். தோழர் ராமு 50 ஆண்டுகளாக கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்ார். நடமாட முடியாத நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் அவர் இருந்து வந்தார்.  அவரது மறைவு செய்தி அறிந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மன்னார்குடி பூக்கல்லை சாலையில் உள்ள தோழர் பி. ராமு இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் நகரக் குழுச் செயலாளர் ஜி. தாயுமானவன், நகரக் குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், ஜி. முத்துக்கிருஷ்ணன், சிஐடியு தலைவர்கள் டி. ஜெகதீசன், தனுஷ்கோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  தோழர் ராமுவிற்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.