சிபிஐ மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி மறைவு: முதலமைச்சர், இரா.முத்தரசன் இரங்கல்
சென்னை, ஆக. 23 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவை யொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சுராவரம் சுதாகர் ரெட்டி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தனது வாழ்வைப் பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட் டோரின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித் தவர் அவர்” என்று தெரிவித்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தலைவர் கலைஞர் நினைவேந்தல் என அவர் தமிழ்நாடு வந்தபோதெல்லாம் அவரது அன்பையும் தெளிவான பார்வையையும் அருகில் இருந்து கண்டு உணர்ந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டி ருக்கும் முதலமைச்சர், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனை வருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித் துள்ளார். இரா.முத்தரசன் இரங்கல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தன்னல மறுப்பின் அடையாளமாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் கடைசி வரை பணி யாற்றிய தோழர் எஸ். சுதாகர் ரெட்டி மறை வுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து நிற்கும் அவரது வாழ்விணையர் பி.வி.விஜயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ஆந்திரா, தெலுங் கானா மாநில கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்றும் அவர் தெரி வித்துள்ளார். தோழர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் கட்சிக் கொடிகள் தாழ்த்தி மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந் தகை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.