tamilnadu

img

இலங்கை தமிழர்களுக்கான தற்சார்பு முன்னெடுப்பு

இலங்கை தமிழர்களுக்கான தற்சார்பு முன்னெடுப்பு

கோவை, அக்.11- கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றத்தில் நடை பெற்ற “இலங்கை தமிழர் களுக்கான தற்சார்பு முன் னெடுப்புகள்’ என்ற கருத்த ரங்கில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர். கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் சார்பில், ‘இலங்கை  தமிழர்களுக்கான தற்சார்பு முன்னெடுப்பு கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஆடிஸ் வீதியில் உள்ள கோவை பத்திரிகை யாளர் மன்ற வளாகத்தில் சனியன்று நடை பெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட கல்லூரி  மாணவ, மாணவிகள் மற்றும் ஊடகவியலா ளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலக தலைமை அதிகாரி வளன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, இலங்கை அகதிகளுக்கான சட்ட அங்கீகாரம் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக் கான நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற் றினர். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு  முகாமில் வசிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சவால்கள் குறித்தும், குடியுரிமை தேவைக் கான அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது, இலங்கை தமிழர் ஒருவர், தங்க ளின் வேதனை குறித்து வாசித்த கவிதை,  அனைவரையும் உணர்ச்சி பொங்க வைத் தது.