tamilnadu

img

சீமான் தம்பிகளின் கேள்வி

அனைத்து தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளரை அறிவித்திருந்தார் சீமான். ஆனால் கரும்பு விவ சாயி சின்னம் பறிபோய்விட்டது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் ‘‘சீமானின் சின்னம் என்ன?’’ என தங்களுக்குள் எழுந்த கேள்வி யை போஸ்டராக வெளியிட்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். வாட்ஸ்-அப் போஸ்டர் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், வேட்பாளர் மற்றும் சீமானின் படம் இடம் பெற்றுள்ளது. சின்னம் வர வேண்டிய இடத்தில் ‘‘சீமானின் சின்னம் என்ன?’’ என எழுதியுள்ளதை பரப்பி வருகின்றனர். இதை பார்த்த பொதுமக்கள், நாம் தமிழர்  கட்சியினரைப் பார்த்து, ஏம்பா.. உங்களுக்கே சின்னம் தெரியலையே., எங்களுக்கு எப்படிப்பா தெரியும்.. என பதில் கேள்வியை கேட்டு வருகின்றனர்.