tamilnadu

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) கேட்ட ஞாபகம் இல்லையோ?

வயதானவர்களுக்கு அல்செமியர்ஸ் எனப்படும் மறதி நோய் உண்டாகிறது. உலகளவில் 5.5கோடி பேருக்கும் இந்திய அளவில் கிட்டத்தட்ட 20இலட்சம் பேருக்கும் இந்த நோய்  பாதிப்பு உள்ளது.  இதற்கு  இரண்டு வகையான சிகிச்சைகள் செய்யலாம். ஒன்று மருத்துவ ரீதியாக. இன்னொன்று மூச்சுப் பயிற்சி,யோகா,நடைப் பயிற்சி, வளர்ப்புப் பிராணிகள், ஓவியம் போன்ற  கலைகள், கைவினைப் பொருட்கள் செய்தல், தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்தல், வாசிப்பு, புதிர்களை விடுவித்தல், துணையுடன் சிறு சமையல் வேலைகள், ஆவணங்களை ஒழுங்கு படுத்துதல்  மற்றும் இசைப் பாடல்களை பாடுவது அல்லது கேட்பது, இரண்டு மொழிகள் கற்றல் அல்லது  பேசுதலும் இந்த நோயை குறைக்கிறதாம். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையானவர்கள் இரு மொழி பேசுபவர்கள். இது குறித்த ஆய்வை தொடங்கியிருக்கிறார்  இந்திய விஞ்ஞானக் கழகத்தை  சேர்ந்த விஜயலட்சுமி ரவீந்திரநாத். இசையைப் பொறுத்த வரை பல ஆய்வுகள் அது ஒரு சக்தி வாய்ந்த நிவாரணி என்கின்றன. ஒரு ஆய்வில் நோயாளிகள் கடந்த காலத்தில் கேட்ட பாடல்கள் புதிய பாடல்களைவிட அவர்களின் மூளையின் பகுதிகளை அதிகம் தூண்டுகிறது என்று காணப்பட்டுள்ளது. மேலும் இசைக்கேற்ற தாளமும் அசைவுகளும் மூளையை அதிகம் ஊக்குவிக்கின்றனவாம். (இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையிலிருந்து)

2 ) மூக்கைப் பிடித்துக் கொள்ளுங்கள் 

மணத்தை உணரும் மனித உணர்விகள் (olfactory bulbs)நல்ல நாற்றத்தை விட கெட்ட நாற்றத்தை உடனடியாக மூளைக்கு அனுப்பி அதை தவிர்ப்பதற்கான  எதிர்வினை விரைவாக ஆற்றப்படுகிறதாம். இந்த செயல்பாடு அனிச்சையாக நடைபெறு கிறது. மணத்தை உணரும் பகுதி மூளையில் கிட்டத்தட்ட 5% அளவிற்கு இடத்தை எடுத்துக் கொள்கிறது. இந்தப் பகுதியின் மூலம் இலட்சக்கணக்கான வேறுபட்ட மணங்களை நம்மால் அறிய முடிகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது ஆய்வாளர்கள் ஒரு சோதனை மூலம் மூக்கிலிருந்து மூளைக்கு செல்லும் சமிக்கைகளை அளவிட்டிருக்கிறார்கள். நறுமணமும் நாற்றமும் கலந்த ஆறுவிதமான மணங்களை முகரச் செய்து, அப்போது ஏற்படும் மின்  உயிரியல் செயல்பாடுகள் அளவிடப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் மண உணர்விகள் கெட்ட நாற்றத்தை 300மில்லி வினாடிகளுக்குள் மூளைக்கு அனுப்பியது.    (இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையிலிருந்து)

3 ) முதல் முதல் தோன்றிய வானமண்டலங்கள் ஆய்வு  

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனும் தொலை நோக்கியை நாசா விண்ணில் ஏவியுள்ளது. தென் அமெரிக்க பிரெஞ்சு கயானா எனும் இடத்திலிருந்து ஆரியேன் 5 எனும் ஐரோப்பிய ராக்கெட் மூலம் இது செலுத்தப்பட்டது.இதற்கு 1000 கோடி டாலர் செலவானதாம். இதற்கு முன் ஏவப்பட்ட ஹப்பிள் என்பதைவிட 100 மடங்கு ஆற்றல் கொண்டது.பூமியிலிருந்து 1.5மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இது சுற்றும்.  13.5பில்லியன் வருடங்களுக்கு முன்  தோன்றிய முதல் வான் மண்டலங்களை இது ஆய்வு செய்யும்.

4 ) கிட்டப் பார்வையும் சொட்டு மருந்தும் 

கிட்டப்பார்வைக்கு கண்ணாடி அணியாமல் கண்களில் சொட்டு மருந்து விடும் புதிய  முறையை அல்லர்கன் எனும் மருந்துக் கம்பெனி  கண்டுபிடித்துள்ளது. இதற்கு அமெரிக்க மருந்துக்  கட்டுப்பாட்டுக் கழகமும் அங்கீகாரம் அளித்துள்ள தாம். மருத்துவரின் சீட்டிற்கு மட்டுமே இது வழங்கப் படும். இந்த சொட்டு மருந்தை தினமும் கண்களில் விட்டுக்கொள்ள வேண்டும். வியுட்டி எனும் பெயரிடப் பட்டுள்ள இது நம் கண் பாப்பாவை சுருக்குவதன் மூலம் கிட்டப்பார்வையை சரிபடுத்துகிறதாம்.

5 ) உலகளாவிய தகவல் தொடர்பு வணிகத்தில் இந்திய நிறுவனம் 

இந்தியாவில் இயங்கும் பார்டி (ஏர் டெல்) நிறுவனத்தின் சர்வதேச அங்கமான ஒன்வெப் நிறுவனம் கசகஸ்தானிலிருந்து 36தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.மொத்தம் 648செயற்கைக்கோளை ஏவும் அதன் திட்டத்தில் இதன் மூலம் 60%நிறைவேறியுள்ளது. ஆரியேன் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து 2021ஆம் ஆண்டு ஏவத் திட்டமிருந்த தொடர்ச்சியான எட்டு திட்டங்களில் இது இறுதி.2022ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய தகவல் தொடர்பு சேவைகளை அது தொடங்க உள்ளதாம்.   

6 ) கூட்டிக் கழிச்சுப் பாருங்க

பலரது வீடுகளில் தேவையற்ற சாமான்கள் குவிந்திருப்பது,அலுவலகங்களில் சிவப்பு நாடா எனப்படும் நீண்ட வழிமுறைகள், சுமைகளினால் திணறும் பூமி இவற்றிற்கெல்லாம் காரணம் நாம் எப்போதுமே கூட்டல் முறையிலேயே சிந்திப்பதுதான் என்கிறார் நடத்தை அறிவியலாளர் (behavioural scientist)பெஞ்சமின் கன்வேர்ஸ். இதற்காக அவரும் அவரது சகாக்களும் நடத்திய ஒரு சோதனையில் புதிர்களை (puzzle)தீர்ப்பதற்கு  சேர்ப்பது அல்லது நீக்குவது மூலம் தீர்வு இருந்த போது  பெரும்பாலோனோர் சேர்ப்பதன் மூலமே தீர்வு கண்டனர். எடுத்துக்காட்டாக கிரிட் எனப்படும் சட்டகத்தில் கட்டங்களை கருப்பாக்குவது அல்லது அழிப்பதன் மூலம் சமச்சீரான வடிவம் கிடைக்கும்.இன்னொரு புதிரில் குழந்தைகள் விளையாடும் லெகோ எனும் கட்டிடம் அமைப்பதில் ஒரு பக்கம்  மூன்று தூண்களும் இன்னொரு பக்கம் இரண்டு  தூண்களும் இருக்கும்போது அதை எப்படி சமன் படுத்துவது. இந்த இரண்டிலுமே பெரும்பாலோர் கட்டத்தை கருப்பாக்குவது மற்றும் இன்னொரு தூணை சேர்த்தே அதை நிறைவு செய்தனர்.குறை வானவர்களே கட்டத்தை அழிப்பது அல்லது ஒரு  தூணை  நீக்குவது மூலம் தீர்வை எட்டினர். கழித்தல் அல்லது நீக்கு வதன் மூலம் ஒரு பிரச்சினையை சரி செய்வதற்கு பயிற்சியும் பரிசு அல்லது  தண்டனை மூலம் தூண்டுதலும் தேவைப்படுகிறது என்பதையும் சோதனைகள் மூலம் காணப்பட் டுள்ளது.எடுத்துக்காட்டாக லெகோ கட்டிட பிரச்சினை சோதனையில் கலந்துகொண்டவர்களிடம் அவர்கள் சேர்க்கும் ஒவ்வொரு துண்டிற்கும் 10சென்ட்  பணம் வசூலிக்கப்படும்; துண்டுகளை  நீக்குவது பிரீ என்று அறிவித்த பிறகு 60% பேர் நீக்குவதன் மூலம் தீர்வை எட்டினர். அதேபோல் சட்டக சோதனையில் நீக்குவதே சிறப்பான முடிவிற்கு இட்டு செல்கிறது என்பதை மூன்று சுற்று பயிற்சி கொடுத்த பிறகு  அதிகமானோர் கழித்தல் முறையை பின்பற்றினர். சோதனையில் பங்கு பெற்றவர்களுக்கு அளவுக்கு அதிகமான தகவல்கள் திணிக்கப்பட்டபோதும் அவர்கள் கழித்தல் முறையை குறைவாகவும் கூட்டல் முறையை அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  (People add by default even when subtraction makes more sense | Science News சயின்ஸ் நியூஸ் கட்டுரையிலிருந்து)