tamilnadu

img

அறிவியல் பரிசோதனை நிகழ்வு

அறிவியல் பரிசோதனை நிகழ்வு

புதுக்கோட்டை, செப். 11-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாணவர்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் பரிசோதனை நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி எளிய அறிவியல் பரிசோதனைகளான அளவைகள், சவ்வூடு பரவல், இயற்கை நிறம் காட்டி, நேர்மாறல் எதிர்மாறல், எத்தனை வடிவங்களை உருவாக்கலாம். இயக்கம், காரணிகள், பகா எண், கோதுமை, இதயம், இதயத்துடிப்புமானி, நீர் சுழல், வளைந்த பென்சில் உள்ளிட்ட சோதனைகளை செய்து காண்பித்தார். இந்தப் பரிசோதனை நிகழ்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளரும், பள்ளியின் அறிவியல் ஆசிரிருமான ரகமத்துல்லா கருத்துரை வழங்கினார். அவர் பேசும்போது, மாணவர்களிடையே அறிவியல் மன்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இப்பள்ளியில் வானவில் மன்றம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளிடையே, இயல்பாக உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் என்றார்.