புதிய கற்கால கருவியை கண்டெடுத்த பள்ளி மாணவி
வருசநாடு, ஆக.29- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே கிளியஞ்சட்டி மலை அடிவாரப் பகுதியில், விவசாயம் செய்து வருபவர் மலைச்சாமி. இவரது மகள் வர்ஷா ஸ்ரீ, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினங் களில் தன் தந்தைக்கு உதவியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பாதி புதைந்த நிலையில் வித்தியாசமாக இருந்த கல் ஒன்றை பார்த்துள்ளார். அதைத் தோண்டி எடுத்துப் பார்த்த போது கூர்மை தீட்டப்பட்ட வழுவழுப்பான கல்லாக இருந்துள்ளது. உடனே தன் தந்தையிடம் அக்கல்லை கொடுத்துள் ளார். வித்தியாசமாக இருக்கும் இந்தக் கல் பழங்கால மக்கள் பயன்படுத்தி யது என்பதை உணர்ந்த மலைச்சாமி, அந்தக் கல்லை கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வத்திடம் காண்பித்தார். கிளியஞ்சட்டி மலைப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்க! இந்த கல் குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில், மலைகள் சூழ்ந்த வளமான இப் பகுதியில் பலமுறை கள ஆய்வு செய்து பல்வேறு கற்கருவிகளை சேகரித்து உள்ளோம். தற்போது மாணவி வர்ஷா ஸ்ரீ கண்டடுத்த கல் ஆயுதம் மிகவும் சிறப்பானது. இக்கல் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதம். மெருகூடிய தொழில்நுட்பத்தில் ஒரு முனை கூர்மையாகவும் மற்றொரு முனை அகலமாகவும் கூர்மையாக்கப் பட்டுள்ளது. 12 செ.மீ. நீளம் 7 செ.மீ. அகலம் கொண்ட இக்கருவி பெரும்பாலும் கோடாரி, அம்புக்கல், வேட்டைக்கருவி, மரம் வெட்டுதல், தோண்டுதல், விவசாயம் போன்ற பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். புதிய கற்காலத்தில் வளமான ஒரு மனித சமூகம் இப்பகு தியில் வாழ்ந்திருக்கிறது. இங்கு அகழா ய்வு செய்தால் பல்வேறு தொல்பொ ருள் சான்றுகள் கிடைக்க வாய்ப்பிரு க்கிறது என்று தெரிவித்தார். புதிய கற்கால கருவியை கண்டெ டுத்த மாணவி வர்ஷா ஸ்ரீ-க்கு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.