tamilnadu

img

ஓணம் பண்டிகை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

ஓணம் பண்டிகை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, செப். 9-  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலை வகுப்பு மாணவர்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.  குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், கேரள மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். வகுப்பறை முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்களை கண்டு மழலை மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். வகுப்பறைகளில் பூக்களால் வண்ணமயமான கோலங்கள் வரைந்தது கண்ணுக்கு இனிய காட்சியாக அமைந்தது. இந்த நிகழ்வில் பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.