tamilnadu

சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

சசிகாந்த் செந்தில் உடல் நிலை மோசமானதால் சென்னை மருத்துவமனையில் அனுமதி

சென்னை,ஆக,31- தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காததை கண்டித்து, தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல் நிலை மோசமானதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கெனவே  உடல்நிலை பாதிக்கப் பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சென்றும் தனது உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிடவில்லை.  மூன் றாவது நாளாக ஞாயிறன்றும் (ஆக,14) உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார்.  கடந்த 10 ஆண்டுகளாகவே மாணவர் களுக்கு பல்வேறு இடையூறுகள் வந்துள் ளன. ஃபெல்லோஷிப், ஸ்காலர்ஷிப் போன்றவை சரியாக வருவதில்லை. இவை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த குழந்தைகளுக்காகவும், மாண வர்களுக்காகவும் நிற்க வேண்டும் என்பதால் உண்ணாநிலை இருப்பதாக சசிகாந்த் செந்தில் கூறினார். இந்திய மாணவர் சங்கம் ஆதரவு இந்திய மாணவர் சங்க சனிக்கிழமை யன்று (ஆக 30),  சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மாநில தலைவர் மிருதுளா, மாநில செய லாளர் சம்சீர் அகமது, மாவட்ட செயலாளர் சஞ்சய் குமார், மாவட்டக் குழு உறுப்பி னர் தீபக், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மோசஸ்பிரபு, குமார் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. ஈசிஜி பரிசோதனை செய்த போது அதில் இதயத் துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் சென்னை செல்வதற்கு சசிகாந்த் செந்தில் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு அவர் சென்னைக்கு  கொண்டு வரப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.