tamilnadu

img

சங்கரய்யாவின் 104 ஆவது பிறந்தநாள் விழா

சங்கரய்யாவின் 104 ஆவது பிறந்தநாள் விழா

அரியலூர், ஜுலை 17-  அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி அலுவலகத்தில் என்.சங்கரய்யாவின் 104 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ. அருண்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, கே.கிருஷ்ணன், ஆர்.சிற்றம்பலம், எஸ்.மலர்கொடி, ஆர்.தனலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.