tamilnadu

img

கனமழையால் டெல்டாவில் அறுவடை பாதிப்பு 1 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்

கனமழையால் டெல்டாவில் அறுவடை பாதிப்பு 1 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்

தஞ்சாவூர், அக். 22 - வடகிழக்குப் பருவமழை காரண மாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளதாகவும், அறுவடை செய்வதில் சிக்கல் மற்றும் கொள்முதல் நிலை யங்களில் நிலவும் தாமதம் காரணமாக விவசாயிகள் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தலைவர்கள் ஆய்வு தஞ்சாவூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களும், அறு வடை செய்து அரசின் நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களில் கொள் முதல் செய்யப்படாமல் முளைத்துக் கொண்டுள்ள நெல் மூட்டைகளையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலை வர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்த ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.சுரேஷ்குமார், என். சரவணன், வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் கோ. அரவிந்தசாமி, மாவட்டத் தலை வர் எஸ். அர்ஜுன், ஒரத்தநாடு எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டி ருப்பதாவது: கடந்தாண்டை விட அதிகரித்த சாகுபடி பரப்பு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங் களில் கடந்த ஆண்டைவிட குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் 1,97,500 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத் தில் 1,93,900 ஏக்கரிலும், நாகை மாவட்டத் தில் 75,250 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 99,250 ஏக்கரிலும் குறு வை சாகுபடி நடந்து பெரும்பகுதி அறு வடை முடிந்துள்ளது. அறுவடை இன்னும் 25 சதவிகிதம் நடைபெற வேண்டிய நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்கும் தருவா யில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசின் நேரடி நெல்கொ ள்முதல் நிலையங்களில் மலைபோல் குவிந்துள்ளன. கொள்முதல் நிலையங்களில் முளைக்கும் நெல் மணிகள் தஞ்சை மாவட்டத்தில் ஆலக்குடி, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக் கோட்டை ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் தேங்கியுள்ளன. இந்த நெல் மணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தேவை யான இடங்களில் நடமாடும் கொள்முதல் (மொபைல் கொள்முதல்) முறையை செயல்படுத்த வேண்டும். நேரடியாக அரவை மில்களுக்கு நெல்லை அனுப்பி வைத்திட வேண்டும். 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்திட வேண்டும். டெல்டாவில் 5.87 ஏக்கரில்  குறுவைச் சாகுபடி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப் பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2,12,247 ஏக்கர் கூடுதலாக சாகுபடி நடந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு 5,87,875 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ள நிலையில் அரசு முன்கூட்டியே திட்ட மிட்டு கூடுதலான கொள்முதல் நிலை யங்களை திறந்திருக்க வேண்டும். அரசு இன்னும் கூடுதலான முன்னெச்சரிக்கை யுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏறத்தாழ 1 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரால் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில வட்டங்களில் பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  எனவே, போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் வடிகால் வசதிகளை ஏற்படுத்திடவும், மழையால் நீர்சூழ்ந்துள்ள பகுதிகளை உடன் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவரணம் வழங்கிட வேண்டுமெனவும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு சாமி. நடராஜன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய சாமி.நட ராஜன், கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு, ஒன்றிய அரசு  செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்காததே காரணம் என்று  அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல;  சரியான முன்னேற்பாட்டு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ளாதது முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.