tamilnadu

img

‘என் பட்டு என் பெருமை’ நிகழ்ச்சி

‘என் பட்டு என் பெருமை’ நிகழ்ச்சி

சேலம், செப்.5- எடப்பாடி அருகே பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடை பெற்ற விழிப்புணர்வு முகாமில், அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த அக்கரைப்பட்டி தொழில்நுட்ப சேவை மையத்தில், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் இணைந்து, ‘என் பட்டு என் பெருமை’ என்ற தலைப்பின் கீழ், பட்டு உற்பத்தியை அதிகரிக்க விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலப் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி கலந்துகொண்டு, பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படும் மானிய விவரங்களை தெரிவித்து பேசினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பட்டுக்கூடு அங்கா டிகளிலும் இ - மார்க்கெட்டிங் கொண்டுவர உள்ளதால், அனைத்து பட்டு விவசாயிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அங்காடிகளிலேயே உற்பத்தி செய்திடும் பட்டுக் கூட்டினை விற்பனை செய்திட அறிவுறுத்தினார். இதைத்தொ டர்ந்து, விஞ்ஞானிகள் தாஹிரா பீவி, மேரிப்ளோரா, சாரதா, ஆகியோர் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சந்திரசேகரன், உதவி  இயக்குநர் பொன்மாரி, பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.