tamilnadu

img

சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு

திருவள்ளூர், டிச.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 23 ஆவது மாநாடு ஆர்.கே.பேட்டையில் டிசம் பர் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் நிறைவுரை யாற்றினார். திருவள்ளூர் மாவட்ட கட்சி வரலாறு குறித்து முன்னாள் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.செல்வ ராஜ் எழுதிய புத்தகம் வெளி யிடப்பட்டது. மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு செய் யப்பட்டார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக டி. பன்னீர்செல்வம், கே.ராஜேந் திரன், பி.துளசி நாராயணன், ஜி.சம்பத், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், ஏ.ஜி.சந்தா னம், சி.பெருமாள், இ.மோகனா, ஆர்.தமிழரசு உள்ளிட்டோ ரும் 34 கொண்ட மாவட்டக் குழுவும் தேர்வு செய்யப்பட் டது. வரவேற்புக்குழு செய லாளர் கே.ஜி.கணேசன் நன்றி கூறினார்.