tamilnadu

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை துவக்கம்

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை துவக்கம்

சென்னை, அக். 2 - கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி யை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்திற்குரிய நிதி யை விடுவித்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், ஒன்றிய அரசால் மாநிலத்துக்கு தர வேண்டிய நிதி விடு விக்கப்பட்டதால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு துவங்கியுள்ளது. ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை பதிவு செய்ய 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 25 விழுக்காட்டை தாண்டினால் சிறப்பு முன்னு ரிமை பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறை யில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அக்டோபர் 15க்குள் தகுதியுடைய மாணவர்களின் விவரங் களை EMIS PORTAL இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.