tamilnadu

படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி

படுகொலை செய்யப்பட்ட  எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஆக. 6 - உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறப்பு ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.