ரோட்டரி கிளப் தேசிய கட்டமைப்பாளர் விருது
பாபநாசம், செப். 25- பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில், தேசிய கட்டமைப்பாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளப் தலைவர் முருக வேலு வரவேற்றார். சேவை அறிக்கையை செயலாளர் முஹம்மது அப்துல் காதர் வாசித்தார். உதவி ஆளுநர் பக்ருதீன் அலி அகமது வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் ரமேஷ் பாபு பேசும் போது, “ரோட்டரி 215 நாடுகளில் பரவி உள்ளது. கடந்த எட்டு வருடங்களில் ஒரு குழந்தை கூட போலியோவால் பாதிக்கப் பட வில்லை. 1988 லிருந்து போலியோ சொட்டு மருந்திற்கு முழு தொகையும் வழங்கி வருகிறது என்றார். இதன் பின்னர் 23 தனியார் , அரசு, அரசு உதவிப் பெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இதில் பொருளாளர் விக்னேஷ்வரன், முன்னாள் தலைவர்கள் சரவணன், சேவியர் சுப்ரமணியன், சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.