சாலை பணியாளர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு
முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பு
சென்னை, ஆக. 13 - சாலை பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற ஆணை படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப்பணியாளர்கள் செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் தொடர் உண்ணா நிலை போராட்டம் நடத்த முற்பட்டனர். இதற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கைது செய்து இரவு விடுவித்தனர். இதனையடுத்து மீண்டும் எழிலகம் வளாகத்தில் உண்ணா நிலை போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையி னர் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். அங்கிருந்து மீண்டும் சென்னை அண்ணா சாலைக்கு வந்து எழிலகம் செல்ல முற்பட்ட சாலைப்பணி யாளர்களை காவல்துறையினர் மறுபடியும் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். ஆகஸ்ட் 13 அன்று காலை எழிலகம் நோக்கி சாலைப் பணி யாளர்கள் வந்தனர். அப்போது, “சுதந்திர தினத்தன்று முதல மைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார். அதில் சாலைப் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய வழி காட்டுதல் செய்வார் என்று நம்பிக்கையுடன் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்கத் தின் பொதுச்செயலாளர் அம்சராஜ் தெரிவித்துள்ளார்.