tamilnadu

img

பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் வருவாய் துறை ஊழியர்கள்  வலியுறுத்தல்

பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் வருவாய் துறை ஊழியர்கள்  வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஆக. 23- வருவாய்த்துறை அலுவலர்கள் பணி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திரு வண்ணாமலையில் மாவட்ட கோரிக்கை மாநாடு நடை பெற்றது. மாவட்டத் தலைவர்கள் பூ.ரகுபதி, எ.ரமேஷ், எஸ்.சையத் ஜலால், பி.விஜயகுமார், கீ.ரமணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஆர்.காவிரி வரவேற்றார். மாநில அமைப்புச்  செயலாளர் கே. பெருமாள் துவக்க உரையாற்றினார். கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர்கள் பரிதிமால் கலைஞன், எஸ். பார்த்திபன், எ.ஏழுமலை, பி.சென்னையன், பி.கலிமுல்லா, என்.தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் க. பிரபு, முன்னாள் பொதுச் செயலாளர் என். சுரேஷ் சிறப்புரையாற்றினர். கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றினார், மாநில செயற்குழு உறுப்பினர் கங்கா பவானி நன்றி கூறினார். தீர்மானம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணி பளுவை குறைத்திடவும், உரிய கால அவகாசம் அளித்திடவும் வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.