2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஓய்வூக்கால பணப்பலன்கள்
போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா
சென்னை, ஜூலை 22 - 24 மாதங்களாக ஓய்வு பெற்றோருக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்க கோரி செவ்வா யன்று (ஜூலை 22) பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதி யர்கள் இணைந்து தர்ணா நடத்தினர். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்கள். ஓய்வூதியர் களின் கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் கூறியதோடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். 4 ஆண்டுகளை கடந்தும் அவை நிறைவேற்றப்படவில்லை. 24 மாதங்களாக ஓய்வுபெற்ற 3 ஆயிரம் ஊழியர்களுக்கு. ஓய்வுக்கால பணப்பல னாக வழங்க வேண்டிய 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வழங்காமல் உள்ளது. மே மாதம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 3 மாதங்களில் வழங்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். அதன்படி இதுவரை வழங்கவில்லை. 1.4.2003 ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த 94 ஆயிரம் பேரு ஓய்வூதியம் கிடைக் காத நிலை உள்ளது. இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர், அதில், 300 பேர் இறந்துவிட்டனர். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, பிற துறை ஓய்வூதி யர்களுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.