tamilnadu

img

ஓய்வு பெற்றவர்களை ரயில்வேயில் நியமிப்பதற்கு டிஆர்இயு எதிர்ப்பு

மதுரை:
ரயில்வேத்துறையில் நஷ்டம் என்றுகூறிவிட்டு ஆட்குறைப்பு செய்த மத்திய அரசு தற்போது ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளை பணி நியமனம் செய்வது ஏன் தெட்சிணரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) கேள்வியெழுப்பியுள்ளது.இது குறித்து தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மதுரை மண்டல பொதுச் செயலாளர் ரா.சங்கரநாராயணன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- 

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த வரைவு நெறிமுறைகளை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினங்கள் துறை ஆகஸ்ட் 16-ஆம் தேதிவெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற மத்தியஅரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில்மீண்டும் பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது. லட்சகணக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்காமல் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களை நியமனம் செய்வது படித்துமுடித்த கோடிக்கணக்கான பட்டதாரிகளின் அரசு வேலை வாய்ப்புகளை பறிப்பதாகும். தற்போது பணியில் உள்ளமத்திய அரசு ஊழியர்களின் பதவி உயர்விற்கும் தடையாய் உள்ளது.மத்திய அரசு இளைஞர்களின் எதிர் காலலத்தைக் கருத்தில் கொண்டு இந்தமுடிவை மறுபரிசீலனை செய்ய வேண் டும். காலியாக உள்ள இடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

;