tamilnadu

img

பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை, டிச.24- தந்தை பெரியாரின் 48ஆம்  ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அவருடன் திமுக மூத்த தலைவர்கள்  டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

கி.வீரமணி

அதேபோல், திராவிட கழக  தலைவர் கி.வீரமணியும் பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரு டன் கலிபூங்குன்றன், அன்பு ராஜ், குமரேசன் உள்ளிட்ட ஏரா ளமானோர் மரியாதை செலுத்தி னர். பின்னர் கி.வீரமணி தலைமையில் சிந்தாரிப்பேட்டை யில் இருந்து பெரியார் திடல் வரை  அமைதி ஊர்வலம் நடை பெற்றது. அங்கு பெரியார் நினை விடத்தில் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.