ராணிப்பேட்டையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நல வாரிய அலுவலகத்தை அமைத்திடுக தமுஎகச மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
ராணிப்பேட்டை, அக்.12 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ராணிப்பேட்டை 2வது மாவட்ட மாநாடு சனிக்கிழமை (அக்.11) மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் வரவேற்புக்குழு தலைவர் செ.சரவணன் தலைமையில் மக்கள் ஒற்றுமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் மாவட்ட துணை செயலாளர் த.ரஜினி வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பி னர் மு.க.ஜீவா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் உமா அமரநாதன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் லோ.ரஜினிகாந்த் வேலை அறிக்கையையும், துணை தலைவர் ஜே.ஜெயந்தி கலை பண்பாட்டு அறிக்கையையும், ஆர்.மணிகண்டன் நிதிநிலை அறிக்கையையும் முன்வைத்தனர். மாநில குழு எஸ்.சுரேந்திரன், தமிழ் ஆர்வலர் சீனி.தனஞ்செழியன், மருத்துவர் ஆ.கபிலன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாநில துணை செயலாளர் கவிஞர் ஏகாதசி நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக த.ரஜினி, செயலாளராக லோ.ரஜினிகாந்த் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் இ.சங்கரதாஸ், மாநில துணைச்செயலாளர் ஏகாதசி, சமூக செயற்பாட்டாளர் கவிஞர் சுகிர்தராணி ஆகி யோர் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தீர்மானங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நல வாரிய அலுவலகம் ராணிப்பேட்டையில் அமைக்க வேண்டும். ராணிப்பேட்டை கிளை நூல கத்தை புதுப்பித்து விரிவுபடுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாண வர்களை ஊக்குவிக்க முதல் மூன்று இடங்களை பிடிக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் பட்டியலை தனித்தனி யாக வெளியிட வேண்டும். அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தற்போ துள்ள 7.5% உயர்கல்வி இட ஒதுக்கீட்டை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு நடத்தும் புத்தக கண்காட்சி யில் மாவட்ட கலை குழு, நாட்டுப்புற கலை ஞர்களை பயன்படுத்த வேண்டும்.
