சென்னை, மார்ச் 18 - கோவில் நிலங்களை பயன்படுத்துவோரை அச்சு றுத்தும் அறநிலையத் துறை யின் நடவடிக்கைகளை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 18) சென்னையில் பய னாளிகள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட பயனா ளிகள் ஆணையர் அலுவல கம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை காவல்துறையி னர் தடுத்து நிறுத்தி, ஆணை யருடன் பேச்சு நடத்த சங்க நிர்வாகிகளை அழைத்து சென்றனர்
முதலமைச்சர் தலையிட வேண்டும்
அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி. நடராஜன், ‘‘அறநிலையத் துறை கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக மக்கள் வசிக்கின்றனர்; நிலத்தை சாகுபடி செய்து வருகின்றனர். குடியிருப்போ ருக்கு வாடகையை பல மடங்கு உயர்த்தி, அதை 2011ஆம் ஆண்டிலிருந்து கட்ட வேண்டும் என்று துறை நிர்ப்பந்திக்கின்றது. வாடகை செலுத்த தயா ராக உள்ளோம். அநியாய வாடகையை செலுத்த இயலாது. 1000 சதுர அடி குடியிருப்புக்கு 32ஆயிரம் ரூபாய் வாடகை கேட்பது எந்த வகையில் நியாயம்? பல லட்சம் ரூபாயை குறிப்பிட்ட தேதிக்குள் ஒரே தவணையாக செலுத்த வில்லை என்றால், வீடுகளை, இடிப்பது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். தலைமைச் செயலா ளர் தலைமையில் அமைக்கப் பட்ட குழுவில் பயனாளி கள், சங்கங்களின் பிரதிநிதி களுக்கு இடம் தர வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும். வாட கையை உயர்த்தும்போது பயனாளிகளின் கருத்தை கேட்க வேண்டும். 4.75 லட்சம் ஏக்கரில் குத்தகை விவசாயம் செய்யும் 2 லட்சம் விவசாயி களை வெளியேற்றும் நட வடிக்கையை கைவிட வேண்டும். சட்டம், அரசாணை களுக்கு புறம்பாக செயல் படும் போக்கை துறை ஆணையர் மாற்றிக் கொள்ள வேண்டும். 50 லட்சம் பேர் சம் பந்தப்பட்ட பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்க!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் பேசு கையில், ‘‘சமத்துவ நீதி என்ப தன் ஒரு பகுதிதான் சமூக நீதி. சமூக நீதி என்பது இடஒதுக்கீடு மட்டுமல்ல. மக்கள் வாழும் இடத்தை உறுதி செய்வதும்தான். எனவே, மக்களின் உணர்வு களை பிரச்சனையின் தன் மையை புரிந்து கொண்டு அரசு நடக்க வேண்டும். பாஜ கவை சமாளிக்க மக்களை வதைக்கக் கூடாது. அரசு மீது நம்பிக்கை வைத்து அறப்போராட்டம் நடத்து கிறோம். அறநிலையத் துறை, அமைச்சரின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது” என்றார்.
நியாயமான வாடகையை செலுத்தத் தயார்
“கோவில் நிலங்களை குடியிருப்பவர்களுக்கு வழங்க அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நியாயமான வாடகையை செலுத்த மக்கள் தயாராக உள்ளனர். ஏற்கெனவே, நிர்ணயிக்கப்பட்ட வாடகை அநியாயம் என்பதால்தான் அதை சீரமைக்க வாடகை நிர்ணய குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னிச்சையாக கட்டணம் நிர்ணயிப்பது, ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன்’’ என வும் அவர் கேள்வி எழுப்பி னார்.
விரைவில் நல்ல செய்தி
இதன்பின்னர் ஆணையர் குமரகுருபரனை சங்கத்தின் அமைப்பாளர் சாமிநடரா ஜன், நிர்வாகிகள் நெ.இல.சீதரன், வ.செல்வம், துரை ராஜ், பிரகாஷ்மூர்த்தி ஆகி யோர் சந்தித்து 12 அம்ச கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரை வில் நல்ல செய்தி வெளி யாகும்’’ என்றும் ஆணையர் தெரிவித்ததாக சாமி.நடராஜன் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் பொ துச் செயலாளர் டி.ரவீந்தி ரன், சென்னை மாமன்ற உறுப்பினர் இரா.ஜெயரா மன், சங்கத்தின் தென் சென்னை மாவட்ட நிர்வாகி கள் நடராஜன், எஸ்.வெள் ளைச்சாமி, ரவிகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.