tamilnadu

img

திருநெல்வேலி தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்து

திருநெல்வேலி, மே 15-  திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரியில் ஞாயி றன்று அதிகாலை நேரத்தில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துள்ளானது. இதில் சிக்கியுள்ள இருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாறைகள் உருண்டதில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேர்  காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கியுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து  குறித்து கல்குவாரியைச் சார்ந்த சங்கரன் என்பவரிடம் முன்னீர்பள்ளம் காவல்து றையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ‘‘நிலச்சரிவுதான் விபத்துக்கான முக்கிய காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள் ளது. தீயணைப்பு மற்றும் காவல்துறை யினர் உதவியுடன் இதுவரை 2 நபர்கள்  மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 4 நபர்களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்திய கப்பற்படை உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு வின் உதவியும் கோரப்பட்டது. அரக் கோணத்திலிருந்து 30 பேர் கொண்ட குழு வந்துகொண்டிருக்கிறது. விரைவில் 4 பேரை மீட்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படு கிறது. குவாரி உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

முதல்வர் ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரி வித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விபத்தில் காயமடைந்தவர் களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி  வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந் தேன். மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை யின் முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகி யோரை அறிவுறுத்தியுள்ளேன்.  மேலும் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;