tamilnadu

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை

திருவாரூர் ஆக26- மக்கள் அதிகார அமைப்பின் தஞ்சை மண்டலக் குழு குடந்தை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமையில் திருவாரூரில் கூடியது. மாநிலப் பொருளாளர் காளியப்பன், தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு சம்பா முடியும் வரை போதுமான அளவு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும்.  திருவாரூர் விளமல் கடைத்தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்க டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.