tamilnadu

நத்தம் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

நத்தம் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

திருவள்ளூர், செப்.28- நெல் கொள்முதல் நிலையங்களில் ஊடுருவியுள்ள, போலி விவசாயிகளை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய இரண்டு வட்டங்களின் மாநாடு ஞாயிறன்று (செப் 28), மேலப்பூடி கிராமத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி னார். மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள் துவக்கி வைத்தார். பகுதி செயலாளர் வி.குப்பன் வேலை அறிக்கையையும் பொருளாளர் ஜி.ரமேஷ் வரவு,செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது மாநாட்டை நிறைவு செய்து  பேசினார். துணைச் செய லாளர் என்.நந்தகுமார் நன்றி கூறினார். தீர்மானங்கள் புண்ணியம் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஊடுருவியுள்ள போலி விவ சாயிகளை தடுக்க வேண்டும்,  திண்டிவனம் முதல் நகரி  வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் பாதிக்கப்படும் விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,  பாண்ற வேடு, அம்மனேரி ஆகிய பகுதிகளில் மலை புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,  அம்மனேரி, கோணசமுத்திரம், கொண்டாபுரம் கிராமங் களில் வாழும் மக்களுக்கு வனத்துறையினர் தடையில்லா சான்றுகளை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு ஆர்.கே.பேட்டை வட்டத்தலைவராக வி.எம்.அருளப் பன், செயலாளராக வி.குப்பன், பொருளாளராக ஜி.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளிப்பட்டு வட்டத் தலைவராக டி.எஸ்.ஏழுமலை, செயலாளராக என்.நந்த குமார், பொருளாளராக கமலா ஆகியோர் தேர்வு செய்