ஓய்வூதியர்களை பாதிக்கும் வேலிடேசன் சட்டத் திருத்தத்தை ரத்து செய்க!
ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்க மாநில மாநாடு கோரிக்கை திருச்சிராப்பள்ளி, செப். 3 - அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதி யர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு, திருச்சி துடையூர் சோலை மஹாலில் தோழர் கே.கே.என். குட்டி நினைவரங்கத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். சிஐடியு துணை பொதுச் செய லாளர் கண்ணன் துவக்க உரையாற்றினார். ஏ.ஐ.பி. ஆர்.பி.ஏ. பொதுச்செயலாளர் டி.கே. தேப்நாத், என்.எப்.பி.இ.மா. பொதுச்செயலாளர் ஜனார்த்தன் மஜூம்தார், எப்.என்.பி.ஓ. மேனாள் மாநில பொதுச் செயலாளர் டி.தியாகராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநிலச் செயலாளர் பி. மோகன் ஈராண்டறிக்கையை வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஜி. குமார் சமர்ப்பித்தார். செவ்வாய்க்கிழமை பொருளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பி. மோகன் தொகுப்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் - கருணாநிதி, சண்முகசுந்தர்ராஜ், அ.இ.பொருளா ளர் சி.சேகர் ஆகியோர் பேசினர். ஓய்வூதியர்களை பாதிக்கும் வேலிடேசன் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை விரைவில் அமைத்து, அதன் பலன்களை அனைத்து ஓய்வூதியர்களுக் கும் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பிடிக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படி நிலுவைத் தொகையை திரும்ப வழங்க வேண்டும். நாடாளு மன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளின் படி எப்.எம்.ஏ.யை ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் 65, 70, 75 வயதை எட்டும் போது 5 சதவிகிதம் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். கம்யூடேஷன் தொகையை திரும்ப வழங்கும் காலத்தை 12 வரு டங்களாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜாராம் தீர்மானங்களை முன்மொழிந்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநிலத் தலைவராக ஏ. பழனிச்சாமி, செயலாளராக பி. மோகன், பொருளா ளராக ஏ. கதிர்அகமது ஆகியோரும் உதவித் தலை வர்கள், உதவிச் செயலாளர்கள் அடங்கிய நிர்வா கக் குழுவினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத் தின் அகில இந்திய தலைவரும் என்சிசிபிஏ செய லாளருமான கே. ராகவேந்திரன் சிறப்புரையாற்றி னார். கே.ஆர். கணேசன் நன்றி கூறினார்.