tamilnadu

img

குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுக

குடியிருப்பு பகுதிகளில் உள்ள  டாஸ்மாக் கடைகளை அகற்றுக

 அரசுக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 28- குடியிருப்பு பகுதி களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று  வாலி பர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே.நகர் பகுதி மாநாடு தலைவர் கே. கோபி தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் முபாரக் பாஷா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் ஏ.விஜய் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். செயலாளர் என்.விஜய குமார் வேலை அறிக்கை யையும், பொருளாளர் டி.பி.ராஜா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்  தமிழன் வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயலாளர் ஜி.நித்தியராஜ் பேரவையை நிறைவு செய்து பேசி னார். முன்னதாக துணைச் செயலாளர் ஐஸ்வர்யா  வர வேற்றார். துணைத்தலைவர் குணசேகரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் குடியிப்பு பகுதிகளில் உள்ள மதுபானக் கடை களை அகற்ற வேண்டும், கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும், பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக எம்.ஷாஜ கான், செயலாளராக கே. கோபி, பொருளாளராக டி.ஐஸ்வர்யா உள்ளிட்டு 13 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.