மதுரை, நவ. 5 - மதுரை மாநகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 வார்டுகளைச் சேர்ந்த 940 குடும்பங்களுக்கு, சு. வெங்கடேசன் எம்.பி.யின் முன்முயற்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கினர்.
60 ஆண்டுகளில் இல்லாத மழை
மதுரை மாநகரில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. எனினும், கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகக் கன மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த மழையால் வெள்ளம் பெருக் கெடுத்த நிலையில், நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாய் களுக்கோ, மழை நீர் கால்வாய்களுக்கு செல்ல முடியாத தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
குறிப்பாக செல்லூர், மீனாட்சிபுரம், ஆனையூர், நரிமேடு, ஐயர் பங்களா ஆத்திகுளம் புதூர், சர்வேயர் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்பு களுக்குள் வெள்ளம் புகுந்தது.
சு. வெங்கடேசன் எம்.பி. முன்முயற்சி
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், அமைச்சர் பெரு மக்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்று வதற்கான பணிகளை முடுக்கி விட்டனர். வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
எனினும், தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளம் வீடுகளுக்குப் புகுந்ததால், பெரும் பாதிப்பைச் சந்தித்த னர். வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் கெட்டுப் போயின. வீட்டு உப யோக சாதனங்கள் பழுதாகிப்போயின. வீட்டின் பகுதிகளும் சேதமடைந்தன.
5 வார்டுகளில் நிவாரண உதவிகள்
இதையடுத்து, அவர்களின் குறைந்த பட்ச தேவையையாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்று முடிவுசெய்த சு. வெங்கடேசன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், ஊழியர்கள், தோழர்களோடு இணைந்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி, நன்கொடைகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் திரட்டி னர். அவற்றை முறையாகவும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கினர்.
12-ஆவது வார்டு பாண்டியன் நகர், காந்திபுரம், எஸ்என்ஆர் நகர், மருது பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் 160 குடும்பங்கள், 16-ஆவது வார்டு முல்லை நகர், தனபால் பள்ளி, ராணுவக் குடி யிருப்பு ஆகிய பகுதிகளில் 240 குடும்பங் கள் 24-ஆவது வார்டு சங்கர் நகர், ஓடக்கரை, பட்டுக்கோட்டையார் வீதி, சத்திய மூர்த்தி 5, 6-ஆவது தெரு பகுதிகளில் 200 குடும்பங்கள், 26-ஆவது வார்டு நரிமேடு மெயின் ரோடு, பிரசாந்த் ரோடு, சரவணா மருத்துவனை, கட்டபொம்மன் நகர் ஆகிய பகுதிகளில் 140 குடும்பங்கள், 27- ஆவது வார்டு சுயராஜ்ஜியபுரம், இருதய ராஜ்ஜியபுரம், போஸ் வீதி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதி களில் 200 குடும்பங்கள் என 5 வார்டுகளில் மொத்தம் 940 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
நன்றி தெரிவித்த மக்கள்கட்சியின் வடக்கு - 2 பகுதிக்குழுச் செய லாளர் ஏ. பாலு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே. அலாவுதீன், எஸ். வேலுதேவா, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ். கணேசன், கே. ஜாகீர் உசேன், பி. முத்து, பி. சரவணக்குமார், எம். பிரசாந்த், சிந்தன் உள்ளிட்ட தோழர்கள் மக்களை நேரடி யாக சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர்.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப் பிடத்தக்க உதவியாக இருந்தது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின ருக்கும், சு. வெங்கடேசன் எம்.பி.க்கும் அவர்கள் தங்களின் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
“ஏற்கெனவே, புதூர் பகுதியில் உள்ள காந்திபுரம், பாண்டியன் நகர், எஸ்என் ஆர் நகர் பகுதிகளில் அடிப்படை பிரச்சனை களை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக பட்டா கேட்டு எம்.பி., தலைமையில் நடந்த போராட்டத் தில் எங்கள் பகுதியில் இருந்து மக்கள் பலரும் கலந்து கொண்டோம். தொடர்ந்து மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நேரில் வந்து வெங்கடேசன் எம்.பி. ஆறுதல் கூறினார். இப்போது அவருடைய ஏற்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் களும் நிவாரண பொருட்களை நேரில் வந்து வழங்கி எங்களுக்கு உதவி யுள்ளனர்” என்று கூறினர்.
பாதுகாப்பு - நிவாரணம்
16-ஆவது வார்டு முல்லை நகர் பகுதி யில் உள்ள மக்கள் கூறுகையில், “மழை பெய்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது என்றவுடன் முதல் ஆளாக எங்களுடைய பகுதியை பார்வையிட வந்தவர் வெங்கடேசன் எம்.பி. தான். எங்களின் துயரத்தை கண்டு உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். நாங்களும் எங்கள் பகுதியில் உள்ள பலரும் அந்த முகாம்களில் போய் தங்கி இருந்தோம். தீபாவளி பண்டிகை என்பதால் இந்த இரண்டு நாட்களில் மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் இப்பகுதிகளில் உள்ள தண்ணீ ரை வெளியேற்றுவதற்கு பெரும் முயற்சி களை மேற்கொண்டு வெள்ளத்தை வெளி யேற்றினர். இப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நிவாரணப் பொருட் களை வழங்கியுள்ளனர். அதற்கு மிகவும் நன்றி” என்றனர்.
அன்று உதவிய அன்னவாசல்
24-ஆவது வார்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, ஓடக்கரை, சத்தியமூர்த்தி நகர் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வழங்கிய போது, அங்குள்ள மக்க ளும் “எங்களுடைய பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் தினக்கூலி மற்றும் வாரச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள். கட்டுமான வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் அதிகம் இருக்கும் பகுதி. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் உணவுப் பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டது. இதனால், தீபாவளி பண்டிகை அதுவு மாக பெரும் துயரத்தில் இருந்தோம். அப் போது, இந்தச் சூழலில் எம்.பி. அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்றனர்.
மேலும், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் இங்குள்ள மக்களுக்கு அன்ன வாசல் திட்டம் என்பதன் மூலம் அப்போதும் கம்யூனிஸ்ட் தோழர்கள் உணவுப் பொருட்களை வழங்கினார்கள்! அன்று அதுவும் பேருதவியாக இருந்தது! இப்போ தும் மழை நீர் புகுந்து உணவுப் பொருட் கள் நாசமான நிலையில் இப்போது கொடுக்கப்படும் பொருளும் எங்களின் நிலையறிந்து செய்த உதவியாக உள்ளது” என்றார்.
தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
அதுமட்டுமல்லாது, “பந்தல்குடி வாய்க் கால் பகுதியில் தடுப்புச்சுவர்கள் அமைத் தால் மீண்டும் இதுபோன்று வெள்ளம் வீடு களுக்குள் புகும் பிரச்சனைகளை தடுக்க லாம். வெங்கடேசன் எம்.பி. தொடர்ந்து பல பிரச்சனைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று தீர்வுகண்டு வருகிறார். அந்த அடிப்படையில் இந்தப் பணியையும் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
- ஜெ. பொன்மாறன்