tamilnadu

img

பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது இருவர் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள், சிபிஎம் போராட்டம்

பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது இருவர் உயிரிழப்பு  உடலை வாங்க மறுத்து உறவினர்கள், சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.23- திருச்சி மாவட்டம், திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ்  நகர் விரிவாக்கப் பகுதியில் திங்களன்று பாதாளச்  சாக்கடை ஆளிறங்கும் குழியில் அடைப்பு நீக்கும்  பணி நடைபெற்றது.  இந்த பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா  கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்தப்  பணியாளர்  சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32) என்பவர்  முதலில் இறங்கினார். அவர் ஒரு மணிநேரத்திற்கு  மேல் மேலே வராத நிலையில் புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த ரவி (வயது 38) என்பவரை  இறங்கி பிரபுவை தேடச் சொல்லி தனியார்  நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் நிர்பந்தித்ததன் விளைவாக இரண்டாவதாக இறங்கியவரும் விஷவாயு தாக்கி குழிக்கு உள்ளேயே உயிரிழந்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினரால் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து, தூய்மைப் பணியா ளர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, தீண்டாமை ஓழிப்பு முன்னணி, வாலிபர், மாணவர்  சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு திங்க ளன்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவு கள் 7, 9 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப்  பதிவு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தினர் வலியுறுத்தினர். இந்நிலையில், துவாக்குடி நகராட்சி அலு வலகத்தில் திருச்சி கோட்டாட்சியர் அருள் தலைமை யில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மாநக ராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர், போலீஸார்,  கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை செவ்வாயன்று நடை பெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  ரூ.30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்க வேண்டும் என உயிரி ழந்தவர்களின் உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியி னர் வேண்டுகோள் வைத்தனர். இதில், உடன்பாடு  ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.  20 மணி நேரப் போராட்டம் இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜெய சீலன், மாவட்ட செயலாளர்கள் வெற்றிசெல்வம், சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், நடராஜன், கார்த்திகேயன், ரஜினிகாந்த், சிஐடியு மாவட்டத் தலைவர் மணிமாறன், பொரு ளாளர் மணிகண்டன், தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கனல்கண்ணன், திருவெறும்பூர் ஓன்றிய செயலாளர்கள் ரவி, குரு நாதன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சேதுபதி, சந்தோஷ்,ரவி, காட்டூர் பகுதிக்குழு உறுப்பி னர்கள் ஜாகீர், நவநீத கிருஷ்ணன், செந்தில், நல்லையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  20 மணிநேரம் தொடர் போராட்டத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இருவரது உடல்களும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.  ஒருவர் கைது  இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரசாந்த் அளித்த புகாரின்  பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்  பதிவு செய்து உரிய பாதுகாப்பு உபகரணங்களு டன் புதை சாக்கடையை தூய்மை செய்யும் பணி யில் ஈடுபடாத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இளவரசன், மேலாளர் கந்த சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளார். இதில் இளவரசனை கைது செய்து உள்ளனர். கந்தசாமியை தேடி வருகின்றனர்.