tamilnadu

img

இளம்வீரர்களை வைத்து சாதித்த பயிற்சியாளர் கார்லோ

கால்பந்து உலகின் மிகப் பெரிய கிளப் லீக் தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்  தொடரின் 67-வது சீசனில் ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில், பிரிட்டன் கிளப் அணியான லிவர்பூலை வீழ்த்தி 14-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் லிவர்பூல் அணியில் உலகத்தரத்தில் முகமது சாலா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். ஆனால் ரியல் மாட்ரிட் அணியில் சொல்லும் அள விற்கு மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லை. லூக்கா மோட்ரிச், இஸ்கோ, மார்சிலோ, கரெத் பாலே, மார்சிலோ, பெஞ்சிமா, வினிஸ் ஆகிய வீரர்கள் மட்டுமே அந்த அணிக்கான நட்சத்திர வீரர்கள்.  இதில் குரோஷியா அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் மட்டுமே சர்வதேச அளவில் பெயர் பெற்ற வீரர்.  கரெத் பாலே ஓரளவு அதிரடியில் பெயர் பெற்றவர். மற்ற அனைவரும் இரண் டாம் நிலை வீரர்கள்தான்.  முக்கியமான தொடர்களில் இரண் டாம் நிலை வீரர்களை கொண்டு  சாதிப்பது கடினம். ஆனால் இரண்டாம் நிலை வீரர்களை கால்பந்து உலகிற்கே அதிர்ச்சி  வைத்தியம் அளித்துள்ளார் ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ. இவரின் தொலைநோக்கு அணுகு முறை இல்லாமல் ரியல் மாட்ரிட், சாம்பி யன்ஸ் லீக்கில் காலிறுதி கூட சென்றி ருக்காது. ரொனால்டோ விலகிய பின்பு கிட்டத்தட்ட ஒரு 3 மாத காலம் பார்ம் பிரச்சனையில் இருந்த ரியல் மாட்ரிட், இனி ரியல் மாட்ரிட், அணி அவ்வளவு தான் என்று பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியது. பயிற்சியாளர் கார்லோ தனது அசாத்திய அணுகுமுறையால் பார்ம் பிரச்சனையில் இருந்து மீண்டது மட்டுமல்லாமல் விமர்சனங்கள் தெரி வித்த நபர்களே இன்று வாழ்த்து தெரி விக்கும் அளவிற்கு கால்பந்து உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.