இராமேஸ்வரம், ஜன.24- இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீன வர்களை விடுவிக்க ஒன்றிய அரசு தவறி னால், இந்திய குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிப்ரவரி 2-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யரிடம் சமர்ப்பிக்கப் போவதாக இராமநாத புரம் மாவட்ட மீனவர்கள் கூறினர். மீனவர் சங்கச் செயலாளர் பி.சேசுராஜா தலைமையில் திங்கள்கிழமை அனைத்து இயந்திரப் படகு மீனவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு களை ஏலம் விடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதற்கு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். ஒவ்வொரு படகும் மீனவர்களின் ரத்தத்தா லும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டு, அதுவே எங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான படகுகள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை ஒரு தலைப்பட்சமாக ஏலம் விடக்கூடாது. ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு ஏலத்தை நிறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவித்துள்ளதை நினைவுகூர்ந்த மீனவர்கள், இதேபோன்ற நிவாரணத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு முன் நிறைவேற்றாவிட் டால், பிப்ரவரி 2-ஆம் தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து இந்திய குடியுரிமைக் கான அனைத்து ஆவணங்களையும் கைவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.