காரைக்கால் ஓஎன்ஜிசி-யில், ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்ஓஎஸ் ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர். விழாவில் அசெட் மேலாளர் உதய் பஸ்வான் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், உதய பாஸ்வான், முதன்மை பொது மேலாளர்கள் டாக்டர் கிரிராஜ் திமன், கேஆர்எஸ் சரவணா, உதவி மேலாளர் பிரா செஞ்சஜித் கோகாய் மற்றும் சரவணக்குமார், சுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.