சென்னை, மே 20 - ரயில்வே தனியார்மயமாகாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலை யில் (ஐசிஎப்) தயாராகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை வெள்ளி யன்று (மே 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஐசிஎப்பில் தயாரான 12,000ஆவது எல்எச்பி ரயில் பெட்டியையும் கொடியசைத்து அவர் வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், ரயில்வேத் துறை சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, மேலும் அதிக பயணிகள் பயணம் செய்ய வசதி போன்றவற்றில் கவ னம் செலுத்தி வருகிறது. ரயில்வே யின் அனைத்து ரயில் நிலையங்க ளும் பல்வேறு வசதிகளுடன் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 ரயில் நிலையங்கள் அவ்வாறு தர மேம்பாடு செய்ய தேர்வு செய்யப் பட்டுள்ளன.
அவற்றில் தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மற்றும் காட்பாடி ரயில் நிலையங்க ளும் அடங்கும். இந்த ஆண்டு வரவு செலவு அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 3,685 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே பல்வேறு மேம்பாடுகள் காண உள்ளது. வந்தே பாரத் ரயில் இந்திய ரயில்வேயின் பெருமை மிகு படைப்பாகும். ஐசி எப்பின் ஊழியர்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில்பெட்டிகளை வடி வமைத்து தயாரித்து அளித்தமைக் காக பாராட்டுகிறேன். இந்தியாவின் அனைத்து பகுதிகளும் விரைவில் வந்தே பாரத் ரயில்கள் மூலமாக இணைக்கப்படும். பலமுறை நாடாளுமன்றத்திலும் பல இடங்களிலும் நான் ஏற்கனவே தெரிவித்தது போல, இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்பட மாட்டாது. எங்களது முழு கவனமும் தற்போது இந்திய ரயில்வேயில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிப்பதில் தான் உள்ளது.
விபத்துக்களை தடுக்க கூடிய கவச் ரயில் பாதுகாப்புக் கருவி போன்ற நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தக் கருவி வந்தே பாரத் விரைவு ரயில்களி லும் பொருத்தப்படும். ரயில் தடத்தின் தரம், ரயில் பாது காப்பு மற்றும் பாலங்களின் நிலை போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பணி யாற்றும் அனைத்து ரயில்வே ஊழி யர்களும் அதிகாரிகளும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இது பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும் என்றார். பின்னர் அஸ்வினி வைஷ்ணவ் ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட 12000 ஆவது எல்எச்பி பெட்டியை கொடிய சைத்து வழியனுப்பி வைத்தார். ஐசிஎப் பொது மேலாளர் ஏ.கே.அகர் வால், தெற்கு ரயில்வே பொது மேலா ளர் பி.ஜி.மல்லையா, ஐசிஎப் தலைமை இயந்திரவியல் பொறியா ளர் எஸ்.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஐசிஎப் அதிகாரிகள், ஊழியர்கள்இதில் கலந்து கொண்டனர். ஐசிஎப்பில் தற்போது தயாராகி வரும் இரண்டு வந்தே பாரத் ரயில் தொடர்களும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்து அனுப்ப திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்று 75 ரயில் தொடர்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.