புதுக்கோட்டை, ஜூலை 30 - பகிர்தல் அறம் என்பதை தமிழச் சமூகம் உலகுக்குக் கற்றுத் தந்து இருக்கிறது என்றார் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோச கரும் எழுத்தாளருமான ஆர். பால கிருஷ்ணன். புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தொடங்கி யுள்ள 5 ஆவது புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியதாவது: தமிழ்ச் சமூகம் தொடர்ந்து தன்னுடைய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வ தற்காக போராடிக் கொண்டே வருகிறது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வுடன் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கிறது. யாரையும் வெறுக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருந் ததில்லை. சிந்துவெளி நாகரிகம் உள்ளிட்ட இப்போ தைய கண்டுபிடிப்புகளில் மிக உன்னதம் என்னவென்றால், அது 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமூகம் தனது ஓய்வு நேரத்துக் கான பொழுதுபோக்கையும் கொண்டிருந்தது என்பதுதான். அது வெறுமனே விளையாட்டாக அல்ல. அதை “அல்லல் தீர்க்கும் உவகை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அயர்ச்சி யை நீக்கும் விளையாட்டையும் கொண்டி ருந்தது என்றால், அந்த மொழியின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் நம்மு டைய கேள்வி.
திருக்குறளை உலகப் பொதுமறை என்று குறிப்பிடக் கூடாது; அது உலகப் பொதுமுறை. வாழ்வியல் பொதுமுறையைத் தந்த நாக ரிகம் நம்முடைய தமிழ் நாகரிகம். “பகிர்தல் அறம்” என்பதை தமிழ்ச் சமூகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் பசியுடன் பல்லாயிரக்க ணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் நடந்தே இடம்பெயர்ந்ததைப் பார்த்தோம். பசிப் பிணிப் போக்குவது மிகப்பெரிய மருத்துவம். நான் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தில் பஞ்சத்தைப் போக்குவதற்காக அரசு அலுவலர்களுக்கு உரிய தனித்துவ அதி காரத்தையும் வழங்கி அரசாணை வெளி யிட்டோம். இந்த அறத்தை எங்களுக்கு சங்க இலக்கியம்தான் சொல்லித் தந்தது. வரலாற்றை எப்போதும் தவிர்க்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ இயலாது. அவ் வாறு தப்பித்துச் செல்ல முற்பட்டோமா னால், கட்டுக்கதைகளால் வரலாறு கட்ட மைக்கப்பட்டு விடும். தரவுகள் சார்ந்து வர லாற்றைக் கட்டமைக்க வேண்டும். கதை களால் அல்ல. யாரையும் சகித்துக் கொண்டு அல்ல, “கலந்து இனிது உரையும்” வாழ்க்கை யை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. 1948 இல் நாட்டிலேயே முதன் முதலாக பொது நூலகச் சட்டம் தமிழ்நாட்டில்தான் இயற்றப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் இவ்வாறான பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காண முடியும். அறிவு சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது, பண்பாட்டு அரசியல் போராட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பண்பா டில்லாத அரசியல்தான் கூடாது, அரசியல் கொண்ட பண்பாடு இருக்க வேண்டும். அடை யாள மீட்பு என்பது யாருக்கும் எதிரானதல்ல அது உண்மைக்கான குரல் என்றார்.