tamilnadu

img

கிராமங்களுக்கு விரைவான இணையசேவை

சென்னை, ஜூன் 9- தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள பாரத் நெட் திட்டம் உத விடும் என்று தமிழக அரசு தெரிவித் துள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை  சார்பில் , தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக,  தமிழ்நாடு கண்ணாடி இழை வலை யமைப்பு நிறுவனத்தின் வாயிலாக குமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (ஜூன் 9)தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

‘பாரத்நெட்’ திட்டம் என்பது, தமிழகத்தில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் “கண்ணாடி இழை கம்பி வடம்” மூலம் இணைத்து,  அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இது தமிழக அரசின் “தமிழ் நாடு கண்ணாடி இழை வலைய மைப்பு நிறுவனம் ” என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல் படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் 1 ஜிபி அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டம் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தொகுப்பு ஏ: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத் தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தொகுப்பு பி:  கடலூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம்.  தொகுப்பு சி: நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தொகுப்பு டி: குமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி,  தொலை மருத்து வம், இணையதள இணைப்பின் மூலம்  வழங்கப்படும் சேவைகளான (தொலை பேசி, தொலைக்காட்சி மற்றும் இணை யம்) ஆகியவற்றை வழங்க இயலும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணைய தள சேவையினைப் பெறுவதன் மூலம்  கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்ற டையும். அதோடு, புதிய ஊரக  வேலைவாய்ப்புகளை உருவாக்கி  பொருளாதார நிலை மேன்மையடைய வும் இத்திட்டம் வழி வகுக்கும். தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவை களைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும்  கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடை வெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.