சிறார்களுக்கு மதுபானம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் மதுபானக் கடைகளுக்கு புதுச்சேரி கலால் துறை எச்சரிக்கை
புதுச்சேரி, செப். 13- 18 வயதுக்குட்பட்ட நபர்க ளுக்கு மதுபானங்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளி யிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை யில்,”மதுபானக் கடைகள், இந்தியத் தயாரிப்பு வெளி நாட்டு மதுபானக் கடைகள் (IMFL) விற்பனை நிலை யங்கள், மதுபானம் பரி மாறும் உணவகங்கள் சிறார்களுக்கு மதுபானம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் அல்லது உறவினர்களுடன் மதுக்கடைகளுக்குள் சிறார்களை அனு மதிக்கப் படுவதாகவும், அவர்க ளுக்கு மதுபானம் பரிமாறப் படுவதாகவும் புகார் எழுந் துள்ளன. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். 1970ஆம் ஆண்டு புதுச்சேரி கலால் சட்டம் பிரிவு 196(சி)-ஐ மேற்கோள் காட்டி, 18 வயதுக்குட்பட்ட வர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது அல்லது வழங்குவது தண்ட னைக்குரிய குற்றமாகும்” என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.