tamilnadu

img

அனைத்து வரைவு விதிகளையும் தமிழ் மொழியில் வெளியிடுக!

சென்னை, மே 26- தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 3 விதிகள் மீதான சிஐடியுவின் திருத்தங்கள் மற்றும் ஆலோ சனைகளை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், தொழிலாளர் துறை முதன்மை செய லாளர் கிர்லோஷ்குமார் மற்றும் தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் . ஆகி யோரிடம் வழங்கினார். ஆர்.இளங்கோவன், பா.அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.  தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்  களை, 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றியமைக்  கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண் டது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில அர சால் 11.04.2022 அன்று, 3 தொகுப்பு சட்டங்க ளுக்கான வரைவு மாநில விதிகள் முதலில் வெளி யிடப்பட்டு, தொடர்புடையவர்களிடமிருந்து ஆட் சேபனைகள், பரிந்துரைகள் கோரப்பட்டன. சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு இதுகுறித்த முழுமையான விவாதத்திற்குப் பிறகு அதன் ஆட்சேபணைகள், பரிந்துரைகளை உருவாக்கி தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளது.

மாநிலங்களின் அதிகாரங்கள் பறிப்பு

தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு சட்  டங்களாக மாற்றியமைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை சிஐடியு கடுமையாக எதிர்த்து வரு கிறது. குறிப்பாக ஆட்குறைப்பு/ஆலை மூடல் மற்றும் நிலையாணை சட்டங்களுக்கான உச்ச வரம்பை 100 என்பதிலிருந்து 300 ஆக மாற்றி யது. ஆலை என்பது 10 தொழிலாளிகளை கொண்டது என்பதை 20 என மாற்றியது. ஒப்பந்த தொழிலாளர் சட்டம் பொருந்துவதற்கான உச்ச வரம்பை 20 தொழிலாளி என்பதிலிருந்து 50  தொழிலாளி என மாற்றியது போன்ற நடவடிக்  கைகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கி றது. மேலும், “தொழிலாளர் நலன்” என்பது அர சியலமைப்பு சட்டத்தின் படி பொதுப்பட்டிய லில் உள்ள அம்சமாகும். ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களில் விதிகள் உருவாக்கும் அதிகா ரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்கின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். இருப்பினும், மாநில அரசுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு உருவாக் கப்பட்டுள்ள விதிகளின் மீது மட்டும் சிஐடியு தனது கருத்துக்கள் மற்றும் திருத்தங்களை சமர்ப்பித்துள்ளது. முதன்மையாக அனைத்து வரைவு விதி களும் தமிழ் மொழியில் வெளியிடப்பட வேண்  டும் என்று சிஐடியு கோருகிறது. சிஐடியு சார்பில் வழங்கப்பட்ட முக்கியமான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் வரு மாறு:

ஊதிய விதிகள்

குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் போது, தொழிலாளியின் பெற்றோர் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெரி யவர்கள் என சேர்த்து நுகர்வு அலகு 3 அலகு களுக்கு பதிலாக 6 அலகுகளாக நிர்ணயிக்கப்பட வேண்டும். வீட்டு வாடகை 10 சதவீதத்திற்குப் பதிலாக 20 சதவீதமாக இருக்க வேண்டும். பிற செலவுகளில் மொபைல் போன்கள் போன்ற நவீன தேவைகள் இருக்க வேண்டும். ஊதிய  நிர்ணயம் செய்ய பெருநகரம் மற்றும் பெருநக ரம் அல்லாத பகுதிகள் என்ற இரண்டு பிரிவு கள் மட்டுமே இருக்க வேண்டும். கிராமப்புறம் என்ற மூன்றாவது வரையறை நீக்கப்பட வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் உள்ள  அனைத்து வகை (Calegery) தொழிலாளர் களுக்கும் அகவிலைப்படி நூற்றுக்கு நூறு ஈடு செய்து (Neutralosati) வழங்கிட வேண்டும்.  தமிழ்நாடு அரசு அனைத்து மண்டலங்களை  சார்ந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைவான ஊதியம் உள்ள மண்டலத்தின் கடைநிலை தொழிலாளியின் ஊதியத்தை அடிப்  படையாக வைத்து, அதற்குண்டான அக விலைப்படியை மட்டுமே வழங்குகிறது. இத னால் தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வெகுவாக குறைந்து, வாங்கும் சக்தி குறைகிறது. ஆனால் ஒன்றிய அரசு நூற்றுக்கு நூறு, அவரவர் ஊதியத்திற் கேற்ப ஈடுசெய்து அகவிலைப்படி வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் ரூ.6 ஆயி ரம் குறைந்தபட்ச ஊதியம் பெறும் கிராம ஊராட்சியில் உள்ள கடைநிலை தொழிலாளி, ஒரு புள்ளிக்கு ரூ.37.25 அகவிலைப்படியாக பெறுகிறார். ஆனால், குறைந்தபட்ச ஊதியம்  ரூ.17 ஆயிரம் உள்ள உயர் திறன் கொண்ட (Skilled-I) கார்ப்பரேஷன் தொழிலாளியும் அவர்  ஊதியத்திற்கேற்ப ரூ.105.60க்கு பதிலாக, அதே  ரூ. 37.25 மட்டுமே அகவிலைப்படியாக பெறு கிறார். இது 35.27 சதவீத அளவிற்கு மட்டுமே ஈடு செய்கிறது. அதாவது தொழிலாளிக்கு ஊதி யத்தில் 65 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இதனை  திருத்தி, விலைவாசி உயர்வுக்கு நூற்றுக்கு நூறு ஈடுசெய்து வழங்கிட விதிகளை உரு வாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் மற்றும் திருத்தியமைக்கும் மாநில ஆலோ சனைக் குழுவிற்கான தொழிலாளர் பிரதிநிதி கள், தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து பரிந்துரைக்கப்பட வேண்டும். மாநில ஆலோ சனைக் குழுவின் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.

தொழில் உறவு விதிகள்

 தொழிற்சங்க பதிவுக்கான விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என விதி உள்ளது. 45 நாட்களுக்குள் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், சங்கம் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கு வதற்காக, உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மா னிக்கும் சரிபார்ப்பு அதிகாரி, முதலாளியால் நிய மிக்கப்பட வேண்டும் என்பதை திருத்தி, தொழி லாளர் துறை அதிகாரியே சரிபார்ப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரப் பட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் உறுப்பினர் பலம் தீர்மா னிக்கப்பட்டப் பிறகு, முதலாளி 7 நாட்களுக்குள்  அங்கீகாரம் வழங்க வேண்டும். தவறினால் தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்  படும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தால், பணிக்குழு மற்றும் குறைதீர்ப்புக் குழுவிற்கு தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். மாநில அளவிலான தொழிற்சங்கமாக அங்கீ காரம் பெறுவதற்கான முறை மற்றும் அளவு கோல்கள் மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங் களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட வேண்டும்.

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் - வேலை நிலைமைகள் விதிகள்

வேலை நேரம் 8 மணிநேரமாக இருக்க, ஒரு நாளில் வேலை பரவல் 12 மணிநேரத்திற்குப் பதி லாக பத்தரை மணி நேரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாது காப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு  2000 தொழிலாளர்களுக்கு ஒரு அதிகாரி என்ப தற்கு பதிலாக 500 தொழிலாளர்களுக்கு ஒரு அதி காரி என அதிகரிக்கப்பட வேண்டும்.   பெண் பணியாளர்களை இரவுப் பணிகளில் பணியமர்த்தும்போது, அப்பெண்தொழிலாளர் அல்லது அவரது தொழிற்சங்கத்தின் ஒப்பு தலைப் பெறுவது அவசியம் மற்றும் குறைந்த பட்சம் 10 பெண்கள் இரவுப் பணிகளில் பணி யமர்த்தப்படுவதையும் மேற்பார்வையாளர் களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக வும் இருக்க வேண்டும்.  பணி நேரம் மற்றும் வாராந்திர விடுமுறை விதி களில் இருந்து தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கும் விதி நீக்கப்பட வேண்டும். மேலும் தலைமை எலக்ட்ரீசியன், போர்மேன் மற்றும் தரக்காப்பீட்டுப் பணியாளர்கள் போன்ற பல தொழிலாளர்களுக்கு இச்சட்டத் தொகுப்பில் இருந்து விலக்கு அளிக்கும் விதி நீக்கப்பட வேண்டும். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்து நிறுவனம், பீடி வேலைகள். கட்டுமானத் தொழிலாளர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான விதி கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


 

;