நூல்கள் வெளியீடு
திருப்பூர், செப்.21- திருப்பூரில் நடைபெற்ற காலை நேர வகுப்பில், நூல்கள் வெளியிடப்பட்டன. திருப்பூரில் தியாகி பழனிசாமி நிலையத்தில் 13 ஆம் ஆண்டு காலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிறன்று நடைபெற்ற மூன்றாம் நாள் வகுப் பிற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். மைதிலி தலைமை வகித்தார். ‘இந்தியா சந்தித்த போர்கள்’ என்ற தலைப்பில் நர்மதாதேவி கருத்துரையாற்றினார். இதைத்தொடர்ந்து, தோழர் டி.எம்.ராஜாமணி எழுதிய ‘அஞ்சா நெஞ்சன் ஆசர் மில் பழனிச்சாமி’ நூல் மறு வெளி யீடு செய்யப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் வெளியிட, மூத்த தோழர் என்.கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கட்சியின் முன்னாள் மாநி லச் செயலாளர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் மொழியாக்கம் செய்து வெளியிட்ட, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் மாசேதுங் எழுதிய ‘தாரளவாதத்தை எதிர்த்துப் போராடுக’ என்கிற சிறு கட்டுரையும், தலைமை பண்பு குறித்து எஸ்.ஏ.பெருமாள் எழுதிய சிறு கட்டுரை யையும் இணைத்து சிறு பிரசுரமாக மறு வெளியீடு செய்யப் பட்டது. நர்மதாதேவி வெளியிட, மூத்த தோழர் எம்டெக் நட ராஜன் பெற்றுக்கொண்டார். முடிவில், நந்தகோபால் நன்றி கூறினார்.
