tamilnadu

img

குழித்துறையில் பொதுக் கழிப்பிடம் நள்ளிரவில்  இடிப்பு  பொதுமக்கள் அதிர்ச்சி

குழித்துறையில் பொதுக் கழிப்பிடம் நள்ளிரவில்  இடிப்பு  பொதுமக்கள் அதிர்ச்சி

குழித்துறை, அக்.2- குழித்துறையில் நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் நள்ளிரவில்  இடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழித்துறை ஜங்ஷனிலிருந்து தபால் நிலைய சந்திப்பு செல்லும் வழியில் சுமார் 50 அடி தொலைவில் ரோட்டின் இடது ஓரமாக பொதுக் கழிப்பிடம் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு இந்தக் கழிப்பிடம் பயன்பட்டு வந்தது. குழித்துறை நகராட்சி சார்பில்  தினசரி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கழிப்பிடத்தில்  அனைத்து வசதியும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கு முன் நவீன வசதியுடன் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் தீர்மானிக் கப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளும் துவக்கப்பட்டது .இந்த கழிப்பிடம் தொடர்பாக ஒரு வழக்கு உயர்  நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்த நிலையில்  பணிகள் நிறுத்தப்பட்டு சில நாள்கள் கழிப்பிடம் மூடப்பட்டது.  இந்த நிலையில் பூஜை  விடுமுறையை பயன்படுத்தி நள்ளிரவில் கழிப்பிடத்தின் பக்கச் சுவர் மற்றும் பின் பக்க சுவரை  யாரோ இடித்துள்ளனர். ஒரு பக்கம் பில்லர் இடிக்கப் பட்டது. வெளியில் தெரியாமல் இருக்க முன் பக்க சுவர் அதே நிலையில் காணப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் களியக்காவிளை போலீசுக்கு புகார் தெரிவித்தார் புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது குழித்துறை நகராட்சி பராமரிப்பில் உள்ள வார்டு எண் 8 ல் குழித்துறை பஸ் ஸ்டாண்டில் அருகில் செல்லை யா மகன் கிருஷ்ணன் சொந்தமான ரி சர்வே எண் ஏ3/ 97 சொத்தின் முன்புறம் பொது  கழிப்பிடம் அமைந்துள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணன் கழிப்பறை தரம் இல்லா மல் கட்டப்பட்டதாக மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று கழிப்பிடம் இடிக்கப் பட்டதாக  தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பார்த்த போது இந்த பொதுக் கழிப்பி டத்தின் பின்புறம் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.இதனால் நகராட்சிக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப் பிட்டிலுள்ள கட்டுமான இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இடிபாடு காரணமாக முழு கழிப்பறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு இடிந்தால் நகராட்சி க்கு ரூபாய் 2 லட்சத்தி 75 ஆயிரம்  இழப்பீடு ஏற்படும்.எனவே கிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நாகர்கோவில், அக்.2- கன்னியாகுமரி மாவட்டம் களியலை அடுத்த கட்டச்சல் பகுதி யில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. களியல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார்  கட்டுப்பாட்டை மீறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த காரில் பய ணித்த 6 பேரும் சிறு காயங்க ளுடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறனர்.  அரசு மேல்நிலைப்பள்ளியில் இணைய வழி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவில், அக். 2- வங்கிகளில் இணைய வழி மூலம் நடக்கும் மோசடி கள் குறித்த விழிப்புணர்வு கருத்ரங்கம் ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராஜாக்கமங்கலம் அரசு.மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் என்எஸ்எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவர் மாணவிகளுக்கு இணைய வழி நடை பெறும் வங்கி மோசடிகள் குறித்து  முன்னாள் வங்கி அதிகாரி அகமது உசேன் விழப்புணர்வு கருத்துகளை மாணவ, மாணவிகளிடம் விளக்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பி. பெருமாள், தலைமை ஆசிரியர்,  மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் என்எஸ்எஸ் முகாம் மாணவ மாணவி களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.